“கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி” இந்த Punch Dialogue-ஐ சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப் பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும். முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர் பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன். அதெப்படி? கல், மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை விட அவ்வளவு பழமையானதா? ன்னு ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes) சரி, எங்கே இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்...
இடைவெளி குறைத்து சமத்துவம் படைப்போம் நீங்க முன்தெரியாத ஒருத்தரை பார்த்து பழக நினைச்சா, அவங்க பெயர், ஊர், எப்படி இங்க வந்தாங்க, அவங்களின் விருப்பு/வெறுப்புகள் என்னென்னன்னு கேட்பீங்கதானே? இப்படி தொடர் உரையாடல்கள் வழியேதான், அவங்களைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க முடியும். ஒருவரின் வரலாற்றைப் புரிந்துகொள்ளும்போது, அவங்களுக்கும் நமக்குமான இடைவெளி குறையும். இடைவெளி குறையுநதால், நாம் அவங்களை நமக்கு சரிசமமாக நினைப்போம்/நடத்துவோம். பிறகு, இணைந்து ஒன்றாக பயணிக்கலாம். நம்ம ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பற்றி ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்த போதிலும், அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பட்டறைகள் மூலம், அவர்களின் வரலாறு, வளர்ப்புமுறை, வாழ்வியல், அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்; இவையெல்லாம் அவர்களின் இன்றைய வாழ்வியலை எவ்வாறு பாதிக்கிறது என்று அவர்கள் நேரடியாக சொல்லக் கேட்டேன். தற்போதைய பழங்குடி மக்கள் இன்றும் பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளனர். புகை, மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமைப்பட்டு, உடல்நலன் மற்றும் மனநலன் குன்றி சமூகத்தின் விளிம்பு நிலையிலே வாழ்ந்து மட...