Skip to main content

Posts

Showing posts from May, 2019

அனைவருக்குமான ஆஸ்ட்ரேலியா

"தீப்பந்தம் ஏந்தும் கை"யை மட்டும் சேர்த்தால் தேமுதிமுக கொடி போல மாறிவிடும் அபாயம் கொண்டதுதான், ஆஸ்ட்ரேலிய பூர்வகுடிமக்களின் (Australian aborigines/indigenous) கொடி. கறுப்பு பூர்வகுடிமக்களையும், சிவப்பு நிலத்தையும், மஞ்சள் சூரியனையும் குறிப்பன. டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் குடிமக்களின் கோடி பச்சை (நிலம்), நீலம் (நீர்), கருப்பு (மக்கள்) , வெள்ளை (தலைப்பாகை மற்றும் ஐமுனை நட்சத்திரம்) நிறங்களைக் கொண்டிருக்கும். ஆஸ்ட்ரேலியாவின் கேப் யார்க் நிலப்பகுதிக்கும், நியூ கினியா தீவுக்கும் இடைப்படட்ட கடற்பகுதியில் இருக்கும் 274 தீவுகள் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகள் என்றும், அதன் குடிமக்கள் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த வாரம் (27 May - 3 June) ரீகன்ஸிலியேஷன் (National Reconciliation Week) வாரம். அதாவது, ஆஸ்ட்ரேலிய பூர்வகுடிமக்கள் மற்றும் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் குடிமக்களுக்கும் (Torres Strait Islanders), இதர ஆஸ்ட்ரேலிய குடிமக்களுக்கும் (non-indigenous) இடையேயான உறவுகளை பலப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கும் வாரம். இந்த ஆண்...