அடிலைடில் (Adelaide) படிக்கிற மாதிரிக்கூட்டத்தோட கூட்டமாய் நடித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள், ஒரு நண்பர் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தோம்.
'சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க’ எனக் கேட்டார் அவர்.
நா(நாங்கள்) - ‘ஏன் நாங்களே சமைச்சுதான் சாப்பிடுறோம்’ -
அ (அவர்): 'ரிஸ்க் இல்ல?' -
நா: 'ஏன், இதுவரைக்கும் எல்லாருமே உயிரோடதான் இருக்கோம்!'.
நா: 'ஆமா, நீங்க பேமிலி தானே? நேத்து (வியாழக்கிழமை) என்ன டின்னர் சாப்டீங்க?'
அ: 'கொஞ்சம் பிஸி. கடையிலிருந்து பிட்ஸா'
நா: 'நாங்களும் காலேஜ் போயிட்டு வீட்டுக்கு லேட்டா வந்தாலும் சப்பாத்தி, சாம்பார் சாதம், பெப்பர் சிக்கன் ஃப்ரை செஞ்சு சாப்ட்டோம்'
நா: 'வேணா, நாங்க ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து சமைச்சு ஒரு விருந்து தர்றோமே' என்று சொன்னபடி ஒரு நாள் போய் தடபுடலாய் பல்வகை விருந்து செய்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு வந்தோம்.
எதோ ஒரு நாளைக்கு சமைச்சுட்டிங்க, தினமும் சமைக்கிற எங்களுக்குத்தான் தெரியும்னுதான சொல்ல வர்றீங்க?
அதான் இல்ல! எங்களுக்கு எல்லாம் அப்போ சமைச்சு சாப்பிடறதுதான் மெயின் பிசினஸ். இந்த படிக்கிறதெல்லாம் சைடு-லதான்.
‘மச்சி, ரொம்ப பசியாய் இருக்கு; சிம்பிளா சிக்கன் பிரியாணி, மட்டன் ஃப்ரை மட்டும் செஞ்சுக்குலாம்னு செஞ்சு சாப்பிடும் கூட்டம் நாங்க!
-திரு
(மனைவியர்கள் கவனத்துக்கு: நாங்க சொல்றது அப்போ)
Comments