தங்கக்கரை, பொற்கரை, சூரியக்கரை, விக்றோரியா எல்லாம் ஆஸ்ட்ரேலியாவில்தான் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? Goldcoast தங்கக்கரை, பொற்கரை என்றும், Sunshine coast சூரியக்கரை என்றும், Victoria விக்றோரியா என்றும் சில தமிழ்க்குழுக்கள், தமிழார்வலர்கள் தமிழ்ப்படுத்துகிறார்கள். Australia (ஆஸ்ட்ரேலியா)-வை ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலியா, ஆசுத்திரேலியா என வேற, வேற மாதிரி எழுதுவதும் சரியில்லை. பிரிட்டிஷார் போல் உதகமண்டலம் என்பதை ஓட்டகமண்ட், ஊட்டி என்று சீரழிக்காமல், ஆஸ்ட்ரேலியர்கள் பெரும்பாலான சிறுநகரங்களுக்கு ஆஸ்ட்ரேலிய பழங்குடியின பெயர்களையே வைத்துள்ளனர் (சில பெரிய நகரங்கள் விதிவிலக்கு). ஒரு அலுவலகத்தில் புதிதாய்ச் சேர்ந்தால், உங்கள் பெயரின் சரியான உச்சரிப்பைச் சொல்லச்சொல்லி, திரும்பத் திரும்ப உச்சரித்து சரியாக சொல்லி, மற்ற பணியாளர்களையும் சரியாக சொல்ல வைப்பார்கள். பெரும்பாலான ஆங்கிலேயர் போல் இந்தியப் பேரை சுருக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஆஸ்ட்ரேலியர்கள் ஊர்களின் பேர்களை ஒரு வகையில் எழுதிவிட்டு, மற்றொரு வகையில் உச்சரிப்பார்கள். ...
Life is such an incredible and happy journey!