Skip to main content

கிம்ப்பி-கிம்ப்பி என்றொரு மரம்


Gympie என்ற ஊரின் பெயரை எப்படி உச்சரிப்பீங்க? ஜிம்பை? கைம்பை? ஜிம்பி? அங்கு வசிக்கும் மக்களைக் கேட்டால் "கிம்ப்பி" என்று சொன்னார்கள். இக்கிராமத்தில் இரண்டு வருடம் வசித்த சாதனை எங்களுக்கு உண்டு. ஏன் சாதனை என்று இன்னொரு நாள் சொல்றேன்.

 கிம்ப்பி என்பது அப்பகுதியில் வசித்து வந்த கபி-கபி (Kabi Kabi) இன பழங்குடியினரின் அபாரிஜினல் மொழிச் சொல்லிலிருந்து வந்தது; சாத்தான் போன்ற (devil-like) என்று பொருள். கிம்ப்பி-கிம்ப்பி என்பது தொட்டால் தேள் போன்று கொட்டி எரிச்சலை ஏற்படுத்தும் மரம் (Stinging Tree). இம்மரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. மரீனா ஹர்லி (Marina Hurley) "கிம்ப்பி-கிம்ப்பி இலைகள் ஏற்படுத்துவது நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடிய மிக மோசமான வலி. உங்கள் தோல் சூடான அமிலத்தால் எரிக்கப்படும் அதே நேரத்தில் மின்சாரம் பாய்ச்சுவது போன்றது அந்த வலி" என்கிறார். 1-2 மீட்டர் உயரமுள்ள இம்மரத்தின் இலை/தண்டு/கிளைகளில் இருக்கும் சிறிய, கண்ணுக்குத் தெரியக் கூடிய அடர்த்தியான மயிர்/முட்களே இந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கிம்ப்பி கிம்ப்பி மாதிரி மொத்தம் நான்கு வகை தாவரங்கள் குயீன்ஸ்லாண்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் மழைக்காடுகளில் உள்ளன.

கிம்ப்பி கிம்ப்பி மரம் பத்தி  இப்ப தெரிஞ்சுட்டீங்களா?

கிம்ப்பி பகுதிக்கு முதன் முதலில் குடிபெயர்ந்த பிரிட்டிஷ்/ஐரோப்பியர்கள் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்து வந்தனர். ஆரம்பத்தில் இங்கு புலம்பெயர்ந்து வந்த ஐரோப்பியர்களில் ஒரு சிலர், டாய்லெட் பேப்பர் தீர்ந்துவிட்டது என்று பரந்து விரிந்த கிம்ப்பி-கிம்ப்பி இலைகளை உபயோகிக்க... பின்விளைவுகளை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்! சில வண்டுகளும், சிவப்புக் கால் வாளபி/சிறிய கங்காரு (Red-legged Pademelon) வகையறாக்களும், இந்த இலைகளை கண்டால் சாப்பிட்டு, நன்றாக மொட்டை அடித்துவிடுகின்றன. இங்கேயே பிறந்து வாழ்ந்த பழங்குடி மக்கள், மல்பெரி பழங்களை போல இருக்கும் கிம்ப்பி-கிம்ப்பி மரங்களின் பழங்களைப் பறித்துச் (முட்கள் மேல் கைபடாமல்தான்) சாப்பிட்டு வந்தனர்.

சரி, இதுக்கு மருந்து, மருத்துவம் ஏதாவது இருக்கா? கிம்ப்பி கிம்ப்பி இலை உங்கள் மீது பட்டுவிட்டால், முதலில் அரிக்கும், ஆனால் சொறியாமல்/தேய்க்காமல் wax strip உதவியால் முட்களை அகற்ற வேண்டும். ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் நீர்த்த கரைசலைப் பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் ஊற்றி குணப்படுத்தலாம் என்று AUSTROP நிறுவனம் பரிந்துரைக்கிறது.

 ஆதலால், நீங்கள் தேசிய பூங்கா மற்றும் மழைக்காடுகளில் நடைபயணம் (Bushwalking) சென்றால், நியமிக்கப்பட்ட நடைபாதைகளில் (Walking tracks) பயணியுங்கள். பாதங்களை பாதுகாக்கக் காலணிகள் (Closed toe shoes) மற்றும் நீண்ட பேண்ட் (long pant) அணியுங்கள். இந்த மாதிரி தாவரங்களை கண்டறிய தெரிந்து கொள்ளுங்கள்.

 -திரு

 Gympie Gympie: Once stung, never forgotten https://www.australiangeographic.com.au/topics/science-environment/2009/06/gympie-gympie-once-stung-never-forgotten/

 Stinging plants http://www.bushwalking101.org/stinging-plants/

 ‘The worst kind of pain you can imagine’ – what it’s like to be stung by a stinging tree http://theconversation.com/the-worst-kind-of-pain-you-can-imagine-what-its-like-to-be-stung-by-a-stinging-tree-103220

 மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்

 #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #அறிவியல் #தாவரவியல்

Comments

Popular posts from this blog

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்...

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் ...

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்...