TLDR
If you know a language other than English and haven’t read or written in that language lately, please start reading and writing. Generations of knowledge do not get passed on when a language is forgotten; especially when we stop writing and reading in that language!
திடீரென்று ஏன் முகநூலில், அதுவும் தமிழில் எழுதுகிறேன் என்று நிறைய வாசகர்கள் (?!) கடிதம், தொலைபேசி, வாட்ஸப் மற்றும் நேரில்.... சரி..சரி... யாரும் கேக்கல... நானே சொல்றேன்!
நான் வலைப்பதிவைத் தொடங்கியபோது, என்னுடைய பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, நிறைய பேர் படித்து பயன்பெறட்டும் என்று ஆங்கிலத்தில் எழுதினேன். படிக்கிறார்களோ, இல்லையோ, ஆளில்லாக் கடையில் டீ ஆத்துவது போல, நான் பாட்டுக்கு இங்கே (http://thirumurugan.blogspot.com/) எழுதித் தள்ளினேன்! அப்போது தமிழ் வலைப்பதிவுகளின் (http://www.tamilmanam.net/) தீவிர வாசகனாய் மட்டுமே இருந்தேன். காரணம், 2003-ல் தமிழில் ஒவ்வொரு எழுத்தாய்க் கோர்த்து எழுதி முடிப்பதற்குள் என் கற்பனைக் குதிரை ஓடியாடிக் (??!!) களைத்துப் படுத்தே விடும். இப்போது கூகுல் ஒலிபெயர்ப்பு (Transliterate - https://www.google.com/intl/ta/inputtools/try/) மற்றும் கூகுல் மொழிபெயர்ப்பு (https://translate.google.com) போன்ற வலை மென்பொருட்களை உபயோகிப்பது சுலபமாய் உள்ளது.
2005-ல் நான் ஆஸ்ட்ரேலியாவுக்கு வந்தபோது, தமிழைப் பேசவும், புரிந்துகொள்ளவும் கூடிய, ஆனால் தமிழைப் படிக்கவோ எழுதவோ முடியாத தமிழ் மாணவ நண்பர்களைக் கண்டேன். அவர்கள் இங்கே பிறந்தவர்கள் அல்ல! சென்னை, சேலம், கோவை போன்ற மெட்ரோக்களில் பிறந்து மெட்ரிகுலேஷனில் படித்து ஆஸ்ட்ரேலியா வந்த அக்மார்க் தமிழ்ப் பசங்க, பொண்ணுங்க! கடந்த பத்து வருடங்களில், இந்த ‘தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள்’ எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நானும் அந்த எண்ணிக்கையில் ஒன்றாக மாறாமல் இருக்கவே இங்கே எழுதுகிறேன்.
சமீப காலமாய் என்னை நானே கேட்டுக்கொண்டது என்னவெனில் நாம் தமிழ்ப் படித்து, தமிழ்ல எழுதலைன்னா நம்ம குழந்தைகள் எப்படி தமிழ் படிக்க, எழுதக் கற்றுக்கொள்வார்கள் என்று. ஒரு மொழியை படிக்க, எழுத மறப்பதுதான் அம்மொழியின் வீழ்ச்சிக்கு முதல் அறிகுறி.
ஆங்கிலம் அல்லாத ஒரு மொழி, உங்களுக்கு தெரியுமெனில், அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, உருது, ஹிந்தி, வங்காளம், துளு, மாண்டரின், காண்டனீஸ், பிரென்ச், இத்தாலியன் என்று எதுவாகினும் பரவாயில்லை, அம்மொழியில் எழுதுங்கள் அல்லது குறைந்த பட்சம் படியுங்கள்.
வாரம் நான் இரண்டு முறை பார்க்கும் ஃபேஸ்புக்கில் தான் தலைமுறைகள் கடந்து எல்லோரும் (ஃபேஸ்புக் பயனர்கள் 2.4 பில்லியன், உலக மக்கள் 8 பில்லியன்!) இருப்பதாகப்பட்டது! நம் தகவல்களை விற்றுக் காசு பார்க்கும் ஃபேஸ்புக், தமிழ் வளர்க்கவும் உதவட்டுமே!
குழந்தைகளை இரண்டாம் மொழி ஒன்றைப் படிக்க, எழுத ஊக்கப்படுத்துங்கள். ஓரிரு வார்த்தை கொண்ட பதில்களாய் இருந்தாலும், பதில் (கமெண்ட் ) அளியுங்கள். ஆங்கிலத்தில் ஏன் எழுதவில்லை என்று மார்க் ஸுக்கர்பர்க் கோபித்துக்கொள்ளமாட்டார்!
--திரு
பின்குறிப்பு: உண்மையான தமிழனாய் இருந்தால் இதை லைக்/ஷேர்/ஸப்ஸ்க்ரைப் செய்து, தமிழில் எழுதி மகிழுங்கள்....(இப்பத்தான்யா இவன் பாய்ண்டுக்கு வந்திருக்கான்)
https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #தாய்மொழி #முதல்_மொழி #Bilingual #இருமொழி

Choose Tamil for reading and writing in social media! |

Comments