6-ஆம் வகுப்பு வரும்போதே, கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளரிடம் சொல்லிவிட்டேன், 'நான் ட்ரைவிங் டெஸ்ட் புக் செய்துள்ளேன்' என்று. 'ஆனால், நீ இன்னும் ரெடி ஆகவில்லை. உன்னால் பாஸ் பண்ண முடியாது. இன்னும் ஒரு கூடுதலாக 10 வகுப்பு ஆகலாம்' என்றார். 'நான் ட்ரை பண்றேன். பாஸ் பண்ணிட்டா நான் தனியாவே கார் ஓட்டக் கற்றுக்கொள்வேன்' என்றேன். ‘என்னது..? பாஸ் பண்ணிட்டு, கத்துக்கப் போறீயா?' என்று அதிர்ச்சி அடைந்தார் அப்பெண். அப்போது முப்பது டாலர்தான் ஓட்டுநர் தேர்வுக்கு கட்டணம். ஐம்பதுக்கு (x 10), முப்பது பரவாயில்லை, அதனால், ரிஸ்க் எடுப்பது சரி என்றே பட்டது! ஓட்டுநர் தேர்வில், இரண்டு வகை தவறுகளால் நீங்கள் தோல்வியடைய வாய்ப்பு உண்டு. தனக்கோ, மற்றவர்க்கோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தால் அது பெரிய தவறு - உடனடி ஃபெயில். உங்களை மேற்கொண்டு கார் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்த நண்பன், இந்தியாவில் நீண்ட நாளாக சொந்த கார் ஓட்டிக் கொண்டிருந்தவன், இப்படி ஒரு டிரைவிங் டெஸ்டில் தவறு செய்ய, காரை (இங்கேயும் சொந்த கார் தான்) பக்கத்தில் நிறுத்திவிட்டு, டாக்ஸி பிடித்து வந்த கதை உண்டு....
Life is such an incredible and happy journey!