tldr; கார் ஓட்டத் தெரியாம, ஆஸ்ட்ரேலிய சிட்டிகளில் வேணா காலம் தள்ளலாம். ரீஜியனல் ஏரியாவில் நாள்கூட தள்ளமுடியாது. so, learn to drive as soon as you come to Australia, if not before.
முதல் வேலை கொடுக்கும்போது கார் ஓட்ட லைஸன்ஸ் கண்டிப்பாய்த் தேவை என்று சொல்லிவிட்டார்கள். பேப்பர் செய்யத் தேவையான மரங்களை விளைவிக்கும் வனவியல் (Forestry) நிறுவனம் என்பதால் இந்த கூடுதல் விதிமுறை. என்னுடைய வேலை என்னமோ அலுவலகத்தின்தான்; ஆனால், ஆறு மாதத்தில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம்.
அடிலைடில் (Adelaide) இருந்த வரை பஸ், ட்ரெய்ன் மற்றும் நண்பர்களின் கார்கள் என்று சொகுசாய் பயணித்துவிட்டு மேற்கு விக்டோரியாவில் (South-western Victoria) இருக்கும் ஹேமில்ட்டன் (Hamilton) சென்று சேர்ந்தபோது, டாக்ஸி மட்டுமே போக்குவரத்துக்கு வழி என்ற நிலைமை. காடு மாடு தெரியாமல் ஓடியாடி, புல், பூ, கங்காரு என்று படம் பிடிக்கும் கலைஞனைக் (!), கூண்டில் அடைத்த காலத்தின் கோலத்தை எப்படிச் சொல்வேன்!
ஆஸ்ட்ரேலியர்கள் அவர்களின் வாழ்நாளில் 75%-ஐ காரில் கழிப்பார்கள் (Car is a moving home!) என்பது என் கணிப்பு. கார் ஓட்ட கொஞ்சமும் சளைக்க மாட்டார்கள். பரந்து விரிந்த ஆஸ்ட்ரேலிய நாட்டில், நாள், வாரக் கணக்கில் பயணம் செய்துகொண்டேஏஏஏஏஏஏ இருந்தால்தான் அக்கரையைப் பார்க்க முடியும்!
Travelling in Australia |
அப்போது கார் ஓட்டக் கற்றுக்கொடுக்க மணிக்கு 50 டாலர்கள்; அதில் பாதிதான் என் ஒரு மணி நேர வருமானம். 500 டாலர் பட்ஜெட் - 10 மணி நேரப் பாடங்களில் - கற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிக்கோள். முதல் 3 வகுப்புகளில் (வாரம் ஒரு வகுப்பு!), காரின் சகல கண்ட்ரோல்களையும் தெரிந்துகொண்டேன். கூட வேலை பார்க்கும் அவ்வப்போது நச்சரித்து, அவர்களின் கார்களை வாங்கி, அவர்களைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு (இந்த ஆஸிகளுக்குத்தான், எவ்ளோ துணிச்சல்!) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பழகினேன்.
ஒரு மணி நேர வகுப்பென்றால், குறைந்தது 5 மணி நேரம், மற்றவர்களிடம் பயிற்சி. இதனால், பல பேரிடமிருந்து பாதுகாப்பாய்க் கார் ஓட்டும் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டேன். பிராந்திய பகுதியில் வசிக்கும் ஆஸ்ட்ரேலியர்கள் அவர்களின் வாழ்நாளில் 75%-ஐ காரில் கழிப்பார்கள் என்பது என் கணிப்பு. கார் ஓட்ட கொஞ்சமும் சளைக்க மாட்டார்கள். பரந்து விரிந்த ஆஸ்ட்ரேலிய நாட்டில் நீங்கள் பயணம் செய்துகொண்டேஏஏஏஏஏஏ இருக்கலாம்.
*இப்பதிவின் இரண்டாம் பகுதி (ஆமா..பெரிய பொன்னியின் செல்வன் மாதிரிதான்!) மிக விரைவில்..*
-திரு
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்
Comments