Thaai Tamil School - Dance Practice |
ஆங்கிலச் சூழலில் வாழும் இவர்களுக்கு, வீட்டுக்கு வெளியே தமிழ் பேச/கற்க வாய்ப்புகள் வெகு சொற்பம். நாங்கள் பேசுவதைக் கேட்பது, எங்களிடம்/தமிழ் நண்பர்களிடம் பேசுவது மூலம் கற்றுக்கொள்கிறான், விஷ்ணு. பெரும்பாலான தமிழ்ப் படங்களின் வன்முறை, சிறுகுழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதால் நாங்கள் விஷ்ணுவுக்கு தமிழ்ப் படங்களைக் காண்பிப்பதில்லை. காரில் (நல்ல) தமிழ்ப் பாடல்கள் கேட்பது உண்டு; காதில் கேட்கும் வார்த்தைகளைக் கற்றுக்கொள்வான்.
முதலில் எங்களின் விருப்பத்தாலும், வற்புறுத்தலாலும் தமிழ்ப்பள்ளிக்கு சென்று, பின் அவனாகவே ஆர்வத்துடன் தமிழ் வகுப்புக்கு செல்ல தொடங்கினான். வார இறுதியின் இரண்டு நாட்களில், அரை நாளை அர்ப்பணிப்பு செய்தல் பெரிய செயல். எங்கள் குழந்தைகள், செய்கிறார்கள்; நாங்களும்தான், செய்றோம்! ஆனா, அவங்க அரைநாள் விளையாட்டைத் தியாகம் செய்து, சலிக்காமல் வருகிறார்களே!!. தாய்த் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. ஆடல், பாடல், பேச்சு, நாடகம் என்று பல திறமைகளை வெளிப்படுத்த குழைந்தைகள் தயாராகி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில், தமிழ் மீடியத்தில் படித்த என்னையெல்லாம் 'ஆங்கில ட்ராமாவில் நடிக்க வா' என்று யாராவது அழைத்திருந்தால், சிக்கன் குனியா, மட்டன் குனியா என்று ஆண்டு விழா முடியும் வரை ஸ்கூலுக்கு மட்டம் போட்டிருப்பேன். இவர்கள் துணிச்சலாக பயிற்சி எடுத்து, பார்வையாளர்கள் கூடிப் பார்க்க, லைவ்-ஆக மேடையில் ஏறி, பேசி நடிக்க இருக்கிறார்கள். நீங்களும் வந்து பார்த்து, கை தட்டி உற்சாகப்படுத்துங்கள்
அதிலும் டான்ஸ் பயிற்சி/ரிகர்ஸலில் இந்த வாண்டுகள் பண்ணும் அட்டகாஸம் இருக்கே... டான்ஸ் மாஸ்டர்களின் நிலை...ரொம்பவே பரிதாபம்ப்பா! சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடறதுதானே, என்ன பிரமாதம் என்று யாரவது சொல்லட்டும்..எங்க பள்ளியில ஒரு வாண்டு குரூப்பை தருகிறோம்...ஒரு ஸ்டெப் எல்லாரையும் சேர்ந்து பண்ண சொல்லி குடுத்து ஆட வைங்களேன் பார்ப்போம்!
-திரு
மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்
#தாய்த்தமிழ்ப்பள்ளி #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
Comments