TL;DR (சுருக்கம்) - தேவைப்படும் நேரங்களில் உதவி கேட்டால், முன்பின் தெரியாதவராய் இருந்தாலும் ஓடோடி வந்து உதவி செய்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். தேவைப்பட்டால் தயக்கமின்றி உதவி கேளுங்கள்; உதவி கேட்பவர்களுக்கு நீங்களும் உதவி வழங்குங்கள். இதுதான் Mateship (நட்புணர்வு) எனப்படும் ஆஸ்திரேலிய பண்பாடு. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆஸ்திரேலிய தினம். வெயில் தாழும் மாலை நேரத்தில் கிளம்பி, குழந்தைகள், குடும்பமாக 8 பேர், இரண்டு வாகனங்களில் (ஒரு யூட் - Ute மற்றும் ஒரு ஆல் வீல் டிரைவ் - All Wheel Drive), அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று வரலாமென்று கிளம்பினோம். சாலையிலிருந்து இறங்கி கடற்கரை மணலில், ஒரு சுற்று போய் விட்டு வீட்டுக்குப் போவதென்று திட்டம். சில நூறு மீட்டர் கடற்கரை மணலுக்குள் ஓடியபின், எங்களுக்கு முன்னால் சென்ற Ute வண்டி முன்செல்லாமல், நிலையாய் நின்று, அதன் சக்கரங்கள் மட்டும் வேகமாய்ச் சுழல ஆரம்பித்தன. மென்மையான கடற்கரை மணலில் சரியான பிடிப்பு இல்லாமல், சக்கரங்கள் வேகமாய் பள்ளம் தோண்ட, சில நொடிகளில் அந்த Ute வண்டி மணலில் மாட்டிக்கொண்டது. பின் சென்ற எங்கள் காரின் சக்கரங்களும...
Life is such an incredible and happy journey!