இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை (ஆஸ்திரேலிய) குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஸ்டான்ந்தார்ப் (Stanthorpe) என்ற சிறிய ஊரில் நடைபெறும் விழா, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்டான்ந்தார்ப் (Stanthorpe), ஆப்பிள்தார்ப் (Applethorpe) சிறுநகரங்கள் , தண்ணீர் தீர்ந்து, வண்டிகள் மூலம் நீர் விநியோகித்தன. இப்போது மழை பெய்து பச்சை பசலேன்று, ஆறு, நீர்வீழ்ச்சிகளில் நீரோடி பார்க்க நன்றாக இருக்கிறது. 2019 டிசம்பர் மாத காட்டுத்தீயால் (bushfire) பாதிக்கப்பட்ட மரங்களெல்லாம் துளிர்த்துள்ளதை பார்த்தது மகிழ்ச்சி.
ஆப்பிள்களை மரங்களில் பார்ப்பது இதுவே முதல் முறை என்பதால், கூடுதல் மகிழ்ச்சி. ஆப்பிள் விளைவிக்க மழை தண்ணீரே போதும், வறட்சியான தட்பவெப்பத்தில்தான் சுவைமிக்க ஆப்பிள்கள் விளையும் என்று பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் இயற்கைமுறை விவசாயம் செய்யும் டெனிஸ் ஏஞ்சலினோ (Dennis Angelino, Gran Elly Orchard) சொன்னார்.
ஒயின் பிரியர்கள் (wine lovers) எனில், இங்கு நிறைய திராட்சை தோட்டங்கள் (vineyards), தொழிற்சாலைகளில் (wineries) சுவை பார்க்க, சாம்பிள் கொடுக்கிறார்கள் (ரொம்ப கசப்பு!). பிடித்தால் நிறைய வாங்கி வரலாம்.
இப்ஸ்விச் (Ipswich) பகுதியிலிருந்து இரண்டரை மணி நேரப்பயணம்தான். வரும் (March 6,7,8) வார இறுதியில் தெரு அணிவகுப்பு, திராட்சை மிதித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன!
'அங்க எல்லாம் தண்ணி பஞ்சமாமே, நாம எதுக்கு போய்க்கிட்டு', என்று வீட்டில் உட்காராமல், ஒரு சிற்றுலா (Picnic) போய் வந்தால் உங்களுக்கும் புத்துணர்வு; வறட்சியால் பாதிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கும் புத்துணர்வு. WIN -WIN.
#ஆஸ்திரேலியா #ஆப்பிள் #திராட்சை #சுற்றுலா #ஆஸிதமிழன் #குயீன்ஸ்லாந்து #குயீன்ஸ்லாண்ட்
Comments