Skip to main content

Posts

Showing posts from September, 2020

Art of Gardening - எங்க வீட்டுத் தோட்டம்

  TLDR; Gardening is a hobby that offers a holistic, therapeutic, joyful and rewarding experience. If you would like to experience magic, plant a seed, nurture it and see the first flower/fruit get produced.  சுருக்கம்: தோட்டக்கலை என்பது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான அனுபவத்தை வழங்கும் ஒரு பொழுதுபோக்கு. நீங்கள் ஒரு அதிசயத்தைக் காண விரும்பினால், ஒரு விதை யை நட்டு, பராமரித்து, அது செடியாக வளர்ந்து  மலர் / பழம் / விளைபொருளாய் உருவாவதைக் காணுங்கள். ஆஸ்திரேலியா வந்த புதுசுல இங்கே உள்ள வீட்டுத் தோட்டங்களையெல்லாம் பார்ப்பேன். அழகான பூக்களோ, பறிச்சு சாப்பிட ஒரு பழம், காயோ இல்லாம இருக்கிற செடி, கொடிகளைக் காட்டி,  'பாத்தீங்களா, எங்க தோட்டம் எவ்வளவு அழகா இருக்கு'ன்னு சொல்லுவாங்க, உள்ளூர் ஆஸ்திரேலியர்கள். 'ஏம்மா, இதெல்லாம் ஒரு தோட்டமமா'ன்னு  சிரிப்பு வரும். இந்த செடி கொடிகளுக்கா மாங்கு, மாங்கென்று வார இறுதி நாட்களில் உழைக்கிறார்கள் என்று தோணும். கொஞ்ச மாதங்களுக்கு முன்னால  ஒரு மரப்பண்ணைக்கு (plant nursery) போயிருந்தோம். அங்குதான், இங்கே வளர்கிற, இந்த மண்ணுக்...

Queensland Elections 2020 குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் போட்டியிடும் தமிழர்

  முன்குறிப்பு: இதை என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. நான் சார்ந்திருக்கும் நிறுவனங்களின் கருத்து அல்ல. ‘உலகத் தேர்தல்களில் முதன்முறையாக, அமெரிக்க தேர்தலில் ஒரு தமிழர் போட்டி', 'இங்கிலாந்து தேர்தலில் வென்ற தமிழர்' என்று செய்திகள் பார்க்கும்போதெல்லாம் ‘பரவாயில்லையே, தமிழ் நாட்டிலேர்ந்து நம்ம ஆளு ஒருத்தர் போய்,  அந்த நாட்டுல போட்டி போடறாங்களேன்னு ஒரு நிமிடம் பெருமையா இருக்கும். ஆனா, பக்கத்திலே வெள்ளைக்கார போட்டோவைப் போட்டு 'இவருதான், அவரு'னு இருக்க படத்தை பார்த்தால் 'அடச்சை, இவரயா நினைச்சு பெருமைப்பட்டோம்' என்றாகிவிடும்.  இப்ப ட்ரெண்டிங்-கில் இருக்கும் அமெரிக்க சித்தி கமலா ஹாரிஸ் மிகச்சிறந்த உதாரணம். ம்ம்ம்ம்..இல்லாத ஊருக்கு, இலுப்பை பூ தான் சர்க்கரை.  அக்டோபர் மாதம் 31ம் தேதி நடக்க இருக்கும் குயின்ஸ்லாந்து மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் திரு. பழனிச்சாமி (@PalaniForMaiwar) அவர்கள் தமிழ் நாட்டில், மதுரைக்கு அருகிலுள்ள அருகிலுள்ள புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து, பின் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவர். தற்போது ஆட்சியில் இருக்கும் தொழிலாளர் (லேபர்)...