Skip to main content

Posts

Showing posts from December, 2020

Moustache + November = மொவம்பர்

நவம்பர் மாதம் வந்தவுடன், பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் கிடா மீசை வைப்பது வழக்கம். இந்த வருடம் வைக்கலாமா-வேணாமா-வேணாமா-வைக்கலாமா என்று இங்கி-பிங்கி போட்டு பார்த்து வைத்தாகிட்டது (யார்றா அது, அதுக்குள்ள, போட்டோ கேக்கறது? பார்க்க !).  இந்த கிடா மீசையை விட, பயமுறுத்த இன்னும் பயங்கரமான புள்ளி விவரங்கள் உள்ளன.   15–44 வயதுள்ள ஆஸ்திரேலிய ஆண்களின்  (தடுக்க முடிகிற) இறப்புகளுக்கான முதன்மை காரணம் - தற்கொலை. ஆஸ்திரேலியாவில் சராசரியாக, ஒவ்வொரு நாளும் சுமார் 6 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர். என்ன காரணம் என்று தெரிய வேண்டுமெனில், ManUp! என்ற டாக்குமென்டரி யை பாருங்கள்.  2003-ஆம் ஆண்டில், மெல்பர்னில், வழக்கமா பீர் அருந்திக்  கொண்டிருந்த இரு தோழர்கள் (Bros), ‘இப்பல்லாம் ஆண்கள் மீசை (Mo - moustache) வளர்ப்பதே இல்லை’  என்று அவர்களுக்குள் கேட்க ஆரம்பித்து, திரும்பவும் முறுக்கு மீசையை ஃபேஷன் ட்ரெண்டாக மாற்ற, ‘மாத்துவோம்-எல்லாத்தையும்-மாத்துவோம்’-னு செய்த முயற்சிதான் மொவம்பர்.  அவர்களுக்குத் தெரிந்தவரின் அம்மா ஒருவர்,  பெண்களின் மார்பக புற்று நோய்...