ஆஸ்திரேலிய அபாரிஜினல்ஸ்தான் (Australian Aboriginals - பழங்குடி மக்கள்) ஆஸ்திரேலிய நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள். அபாரிஜினல் பலர், போதைப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டு இருப்பதை கவனிச்ச ஆஸ்திரேலிய அரசு, போதை எவ்வளவு ஆபத்தானதுன்னு சொல்ல ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிச்சது.
பழங்குடி மக்கள் அதிகமா வாழ்கிற பகுதிகளில், பெரிய பெரிய விளம்பர பலகைகள் வைத்து அவர்களுக்கு புத்தி சொல்ற மாதிரி “DRUGS ARE DEADLY” என்று வாசகங்களை CAPITAL LETTERS-ல் எழுதி, லைட் எல்லாம் போட்டு வைத்தனர். ஆஸ்திரேலிய அரசின் பொறுப்பான இந்தச் செயலை மகிழ்ந்து பாராட்டாமல், இதைப் பார்த்து மிகுந்த எரிச்சலானார்கள், பழங்குடி இனத்தவரின் மூத்த குடிமக்கள். இல்லியா, பின்ன? பழங்குடியின் இளையோர் “deadly” என்ற ஆங்கில வார்த்தையை “excellent”, “cool”, “super” என்ற அர்த்தத்தில் உபயோகிப்பார்கள். உதாரணத்துக்கு சில: “you look deadly, man”, “that’s a deadly idea”. நாம “மரண மாஸ்”, “கொன்னுட்ட போ!” என்று சொல்லுவோமில்ல, அந்த மாதிரி. உள்ளூர் பழங்குடியின சமூகத்துடன் எந்த முன்ஆலோசனையும் செய்யாமல் “Drugs are super cool” என்ற எதிர்கருத்தை விளம்பரம் செய்து மொக்கை வாங்கிய அரசின் நடவடிக்கைதான் Consumer Consultation எவ்வளவு முக்கியம் என்று காண்பித்தது. அபாரிஜினல் நகைச்சுவை பேச்சாளர் (aboriginal standup comedian) கெவின் க்ரோபினேரி (https://www.facebook.com/KevinKropinyeri), ஒரு நிகழ்ச்சியில் சொல்லி, நான் கேட்டது.ஒருவளை நீங்கள் மெல்பனில் வசித்தால் கெவின் க்ரோபினேரி, வரும் ஏப்ரல் 6 முதல் 18 வரை நடக்கும் மெல்போர்ன் நகைச்சுவை விழாவில் நிகழ்ச்சி நடத்துகிறார். 100% சிரிப்புக்கு நான் கியாரண்டி!
https://www.comedyfestival.com.au/2021/shows/kevin-kropinyeri
Comments