இடைவெளி குறைத்து சமத்துவம் படைப்போம்
நீங்க முன்தெரியாத ஒருத்தரை பார்த்து பழக நினைச்சா, அவங்க பெயர், ஊர், எப்படி இங்க வந்தாங்க, அவங்களின் விருப்பு/வெறுப்புகள் என்னென்னன்னு கேட்பீங்கதானே? இப்படி தொடர் உரையாடல்கள் வழியேதான், அவங்களைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க முடியும்.
ஒருவரின் வரலாற்றைப் புரிந்துகொள்ளும்போது, அவங்களுக்கும் நமக்குமான இடைவெளி குறையும். இடைவெளி குறையுநதால், நாம் அவங்களை நமக்கு சரிசமமாக நினைப்போம்/நடத்துவோம். பிறகு, இணைந்து ஒன்றாக பயணிக்கலாம்.
நம்ம ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பற்றி ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்த போதிலும், அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பட்டறைகள் மூலம், அவர்களின் வரலாறு, வளர்ப்புமுறை, வாழ்வியல், அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்; இவையெல்லாம் அவர்களின் இன்றைய வாழ்வியலை எவ்வாறு பாதிக்கிறது என்று அவர்கள் நேரடியாக சொல்லக் கேட்டேன்.
தற்போதைய பழங்குடி மக்கள் இன்றும் பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளனர். புகை, மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமைப்பட்டு, உடல்நலன் மற்றும் மனநலன் குன்றி சமூகத்தின் விளிம்பு நிலையிலே வாழ்ந்து மடிகிறார்கள். ‘அவங்க அப்படித்தான் பாஸ்’-ன்னு கடந்து போகாமல், ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் வரலாற்றோடு, அவர்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
ஆஸ்திரேலிய பழங்குடியினர் எதிலெல்லாம் பின்தங்கியுள்ளார்கள், அவர்கள் சமத்துவம் அடைய இன்னும் என்னென்ன தேவை என்பதை நினைவுபடுத்த மார்ச் 17, 2022 National Closing the Gap Day கடைபிடிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் டாரஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் தீவு மக்களின் சராசரி ஆயுட்காலம், பழங்குடியினர் அல்லாத ஆஸ்திரேலியர்களை விட 10-11 ஆண்டுகள் குறைவு.
அரசு செய்வது இருக்கட்டும். நாம என்ன செய்யலாம்?
கேப்டன் குக் (Captain Cook) வந்தபின் நடந்த வரலாற்றை (White history of Australia) மட்டுமே பள்ளிகளில் படிக்கும் நம் குழந்தைகளுக்கு, அதற்கு முன்னான ஆஸ்திரேலியாவின் முழு வரலாற்றையும் (Black and White history of Australia) கற்பிப்போம்.
சமூக நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களில், ஆஸ்திரேலிய நிலத்தின் உண்மையான பாதுகாவலர்களை நாம் புரிந்து உளமார அங்கீகரிப்பதை (Welcome to Country) உறுதிசெய்வோம். முடிந்தால் அவர்களையும் அழைத்து பேச வைப்போம்.
சமூக ஊடகங்களில், ஆஸ்திரேலிய பழங்குடி மக்களைப்பற்றி அவர்களின் வரலாறு, சமூக கலாச்சாரம் மற்றும் அவர்களின் இன்றைய வாழ்வியல் சிக்கல்கள் பற்றி தெரிந்துகொண்டு உண்மையான கருத்துக்களை பகிர்வோம்.
பழங்குடியின மக்களுக்கு உரிய மரியாதையும், சமவாய்ப்புகளையும் தரும் வலுவான சமூகத்தை உருவாக்குவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம். https://antar.org.au/closethegappledge
பெரும்பாலான துறைகளில் பின்தங்கியிருக்கும் பழங்குடியினருக்கும், மற்ற சமூகத்திற்கும் உள்ள #இடைவெளி இல்லாமல் செய்தால்தான் ஆஸ்திரேலியா ஒரு முன்னேறிய நாடு என்று சொல்ல முடியும்.
-திரு
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்
மேலும் வாசிக்க:
https://www.closingthegap.gov.au/
https://www.pc.gov.au/closing-the-gap-data/dashboard
https://antar.org.au/campaigns/national-close-gap-day
#இடைவெளியைக்குறைப்போம் #ஆஸ்திரேலியசமத்துவம் #அனைவருக்குமானஆஸ்திரேலியா #closethegap #closethegapday #nationalclosethegapday2022 #equalityforallaustralians #indigeneouslivesmatter #firstnationpeople #aboriginalaustralians
Comments